6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதித் தேர்வு எப்போது?

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதித் தேர்வு எப்போது?
X
லோக்சபா தேர்தலுக்கு முன்பே பள்ளி தேர்வுகள் நடத்தி முடிக்கப்படலாம் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பின்படி ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 17ஆம் தேதி ஓட்டு சாவடிகளாக உள்ள அரசு பள்ளிகளை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டி இருக்கும். ஆனால் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி தான் முடிவடைகிறது.

அதிலிருந்து ஏப்ரல் 17ஆம் தேதி வரையில் உள்ள நாட்களில் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்களாகவும் மீதி நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகவும் உள்ளது. இதனால் 5 நாட்களில், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்படுமா அல்லது ஏப்ரல் 19ஆம் தேதி ஓட்டுப் பதிவு நடந்து முடிந்த பின்னர் 6முதல் 9 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடத்தப்படுமா என ஆசிரியர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு தரப்பினர் ஏப்., 13ம் தேதிக்குள் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் பள்ளித்தேர்வுகளை முழுமையாக நடத்தி முடித்தால் மட்டுமே ஆசிரியர்களால் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியும். பள்ளிகளை நடத்திக் கொண்டே அல்லது பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுவது சரியாக வராது எனவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க