குந்தவைக்கு சுயம்வரம் எப்போது ?

குந்தவைக்கு சுயம்வரம் எப்போது ?
X
நடிகை திரிஷாவிற்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார்.

நடிகை திரிஷா பற்றிய செய்திகள் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவரைப்பற்றி சமீபத்தில் பல்வேறு கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் காஷ்மீர் படப்பிடிப்புக்கு அவர் விஜய் உடன் சென்றிருந்தார். திரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்ததும், அவரை உடனே சென்னைக்கு அனுப்பி விட்டனர். விஜய்- திரிஷா நெருக்கம் பற்றி விஜய் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியாகின.

ஆனால் இது பற்ற விஜய்யோ, திரிஷாவோ பதில் சொல்லவில்லை. இந்நிலையில் பொன்னியின் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் நடிகை திரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேச வந்த திரிஷாவை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கோவைக்கு பல ஆண்டுகள் கழித்து வருகிறேன். கோவையை மூன்று விஷயங்களுக்கு எனக்கு பிடிக்கும்.

அதில் கோவை மக்கள், அவர்கள் பேசும் தமிழ் மற்றும் உணவு ஆகியவை கோவைக்கு வர காரணம். கோவையில் எப்போதும் அமைதி இருக்கிறது. அது எப்படி என்று என தெரியவில்லை. கோவையில் ஒரு பாசிட்டிவ் வைபிரேஷன் இருக்கும். இப்படி அழகாக பேசிக்கொண்டிருந்த திரிஷாவிடம் 'லியோ' குறித்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அதற்கு பதிலளித்த அவர் 'லியோ' படப்பிடிப்பில் இருந்துதான் வருகிறேன். லோகேஷ் கனகராஜூம், உங்களோட தளபதி விஜய்யும் நல்லா இருங்காங்க. மற்ற விஷயங்கள 'லியோ' நிகழ்ச்சியில் பேசலாம் என்று கூறினார். அதன்பிறகு குந்தவைக்கு எப்போது சுயம்வரம் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரசிகர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் என்று கூறினார்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்