ரஷ்ய அதிபருடன் அஜித்தோவால் பேசியது என்ன?
பைல் படம்
உக்ரைன் போர் ஒருவருடத்தை நெருங்கும் நிலையில் போரை இந்தியா ஆதரிக்கவில்லை. அதே நேரம் ரஷ்ய தொடர்பையும் முறிக்காமல் அங்கிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் , அதை மேற்குலகம் முறைத்து பார்க்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. இது பிராந்திய நிலமைகளை விவாதிக்கும் மாநாடு என ரஷ்ய தரப்பில் சொல்லபட்டாலும் உண்மையில் உலகுக்கு சில நாடுகளின் நிலைபாட்டை சொல்லும் விஷயம் ஆகும்.
இந்த சந்திப்பின் மூலம் உக்ரைன் போரை நாங்கள் ஆதரிக்கவில்லை அதே நேரம் ரஷ்ய தொடர்பையும் கைவிடவில்லை என சொல்லிவிட்டது இந்தியா. அதாவது எங்கள் நாட்டுக்கு எது நலமோ அதை மட்டும் செய்வோம் எனும் மோடியின் கொள்கையினை பறைசாற்றிவிட்டு வருகின்றார் அஜித் தோவால். அஜித் தோவால் உலகின் மிகபெரிய ராஜதந்திரி மற்றும் ஆசியாவின் மிக முக்கியசக்தியாக கருதபடுபவர், இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதரான அவர் புட்டீனை சந்தித்தபொழுது இந்திய பாதுகாப்பு, பிராந்திய சிக்கல் என பலவற்றை விவாதித்ததாக செய்திகள் வந்துள்ளன.
இந்தியாவை போல பாகிஸ்தானும் சீனாவில் தயவில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஒரு சில அரசியல் கணக்குகளோடு புட்டினை அஜித் தோவல் சந்தித்திருக்கின்றார். சந்திப்புபற்றி அஜித் தோவல் சொன்ன விஷயம்தான் முக்கியமானது, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்திய பங்களிப்பு பற்றி விவாதித்தோம் என்று கூறியுள்ளார். இதன் ராஜதந்திர பரிபாஷை என்னவென்றால் இந்தியாவுக்கு எதிரான எந்த சக்திகளும் ஆப்கனில் இருந்து இயங்க அனுமதிக்கமாட்டோம், ஆப்கானில் ஒரு கண்ணை எப்பொழுதும் வைத்திருப்போம் என்பது தான்.
ஆப்கானில் இந்தியாவின் இருப்பு அவசியம். பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் விதமாகவும் இன்னும் பல பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அது அவசியம் ஆகிறது. ஆப்கனின் அண்டை நாடுகளெல்லாம் ரஷ்ய பிடியில் இருப்பவை என்பதால் ஏதோ திட்டமிட்டு செயலாற்றுகின்றார் அஜித் தோவல். இந்த சந்திப்பு நடக்கும் நேரம் அமெரிக்கா தானே கேள்வி கேட்டு தானே பதிலும் சொல்கின்றது. பெரிய மனிதர் என்றால் எல்லாவற்றிலும் கருத்து சொல்லத்தான் வேண்டும்.
அப்படி ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியாமேல் பொருளாதார தடை விதிக்கும் திட்டமில்லை என தெளிவாக அவசரமாக மீண்டும் ஒருமுறை சொல்லி விட்டது.அதாவது இந்தியா நிம்மதியாக இருக்கட்டும் இருக்கும் பிரச்னையில் இந்தியாவினையும் சேர்த்து இழுக்க நாங்கள் தயாராக இல்லை என அந்நாடு கருதுவது தெரிகின்றது. ஆக இந்தியா என்ற ஒரு மாபெரும் ஜனநாயக நாடு எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த பலமமான இடத்தில் சரியாக உள்ளது.
மேலும், எண்ணெய் வணிகம் மட்டும் அல்ல, பல்வேறு வகையிலும் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இரு தரப்புகளும் முன்பை விட பல்வேறு வணிகத்தினை செய்ய திட்டமிட்டு வருகின்றன. இதன் காரணமாக எதிர்காலத்தில் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். இது நீண்டகால நோக்கில் வளர்ச்சியினை மேம்படுத்தும். இதுவே இரு அரசுகளின் நோக்கமாகவும் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu