இன்று நான் என்ன செய்தேன்? அசத்தும் கம்பம் கவுன்சிலர்

கம்பம் கவுன்சிலர் சாதிக் வெளியிட்ட படம்.
தேனி மாவட்டத்தில் நகராட்சிகளில் 177 கவுன்சிலர்கள், பேரூராட்சிகளில் 336 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் கம்பம் நகராட்சி 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாதிக் சற்று வித்தியாசமாக செயல்பட்டு வருகிறார். பதவியேற்ற முதல்நாளே தனது வார்டில் உள்ள பொதுக்கழிப்பறையை தானே சுத்தம் செய்தார். அந்த கழிப்பறை சுத்தம் செய்வதற்கு முன்னர் எப்படி இருந்தது. தற்போது சுத்தம் செய்த பின்னர் எப்படி உள்ளது என்ற விவரங்களை வெளியிட்டார்.
இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து தினமும் தான் செய்யும் பணிகளை சமூக வலைதளத்தில் படங்களுடன் வெளியிட்டு மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறார். தற்போது லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட போட்டோவில் 11வது வார்டு பகுதியில் ரோட்டோரம் கிடந்த குப்பைகளை (குப்பைகளுடன் ஒரு படம், அகற்றிய பின்னர் ஒரு படம்) அகற்றிய விவரங்களை படங்களுடன் வெளியிட்டு இருந்தார்.
இவர் சிறப்பாக வேலை செய்கிறார் என்பது வார்டு மக்களுக்கு தெரியும். இருப்பினும் இப்படி வெளியிடுவதன் மூலம் பிற வார்டு கவுன்சிலர்களும் இதேபோல் செயல்பட ஒரு உந்துதலாக அமையும் என மக்கள் தெரிவித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu