/* */

வந்தே பாரத் ரயிலில் என்ன தான் ஸ்பெஷல்

செப் 25 ம் தேதி முதல் எழும்பூர்- திருநெல்வேலி வந்தே பாரத் 20665/20666 ரயில் இயங்குகிறது. அது பற்றிய தெரியாத தகவல்கள்!

HIGHLIGHTS

வந்தே பாரத் ரயிலில் என்ன தான் ஸ்பெஷல்
X

பைல் படம்

வந்தே பாரத் ரயிலில் என்ன தான் ஸ்பெஷல் மற்ற ரயில்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

வழக்கமாக விரைவு வண்டிகள் WAP4, WAP7 வகை என்ஜின் கொண்டு இயங்குகிறது. இவற்றில் LHB பெட்டிகள் கொண்ட வண்டிகளில் WAP7 பயன்படுத்தப்படும். அதுவே பெட்டிகளின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும். இதனால் நிறைய டீசல் மிச்சம் ஆகும். என்ஜின் வண்டியை இழுக்கும். அந்த சக்தி கப்ளிங் மூலம் கடைசி பெட்டி இழுக்க சிறிது நேரம் ஆகும். பிரேக்கும் அப்படியே. எலக்ட்ரிக் பிரேக் போடும் போது LHB பெட்டியில் இடிப்பதும், கிருகிருவென அதிர்வும் உணரப்படும். என்ஜினில் 6 மோட்டார் இருக்கும்.

வந்தேபாரத் புதிய தொழில்நுட்பம். இதில் 8 பெட்டியில் 16 மோட்டாரும் 16 பெட்டியில் 32 மோட்டாரும் இருக்கும். அதனால் இதன் பிக் அப் அபாரம். அதாவது 1 நிமிடத்தில் 90 முதல் 100 கிமீ வேகம் அடைந்து விடலாம். பிரேக்கும் அப்படியே. வெகுதொலைவில் இருந்து போடுவதற்கு பதில் குறுகிய தொலைவில் போட்டால் போதும். கப்ளிங் இணைந்தே இருப்பதால் ஜெர்க் இருக்காது. இதனால் உச்ச வேகம் நீண்ட நேரத்தில் பராமரிக்கபடுவதால் நிலையங்களுக்கு இடையே நேரம் குறையும். இதன் காரணமாக ஒரே MPS உள்ள போதும் பிற வண்டிகளை விட முன்பாக சென்று விடும்.

நிறைய நிறுத்தம் கொடுப்பதால் Super fast தகுதி இழந்து விடுமா?

நேரத்தை செலவு செய்தால் தான் மிச்சம் செய்ய முடியும் என்பார்கள். அதுபோல நிறுத்தம் இருந்தால் மற்ற வண்டிகளையும் விட விரைவாக செல்லும். நிறைய பயணிகளும் பயனடைவர்.

சாமானிய மக்களை பொறுத்தவரை கட்டணம் அதிகம் என்றாலும் அதுவும் இலாபமே. ஒரு நாளைக்கு 540 பயணிகள் பயணம் செய்வார்கள். அதனால் அவர்களின் போட்டி இதர வண்டிகளில் கூட்டம், முன்பதிவு, தட்கல் போட்டி குறையும். கடைசி நேர பயணத்திற்கு வசதி. ஆம்னி பேருந்து கட்டணம் அளவில் இருப்பதால் பேருந்துடன் ஒப்பிடுகையில் சற்று காலாற நடக்கலாம் கழிவறை செல்லலாம், இருக்கையை திருப்பி அகன்ற கண்ணாடிகள் வழியாக வேடிக்கை பார்க்கலாம். மானியம், சலுகை கட்டணம், பாஸ் ஓசி பயணம் இல்லாததால் இரயில்வே நஷ்டம் குறையும்.

Updated On: 27 Sep 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு