உக்ரைன்- ரஷ்யா போரில் உண்மையில் நடப்பது என்ன?
பைல் படம்.
ரஷ்யாவின் நோக்கம் நேட்டோ நாடுகள் செய்து கொடுத்த சத்தியத்தை மீறக்கூடாது. ஆம் இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் சோவியத் யூனியனிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள நேட்டோ என்ற அமைப்பை அமெரிக்கா 1949 ல் 12 நாடுகளுடன் தொடங்கியது. அதற்கு போட்டியாக WARSAW என்ற கூட்டமைப்பை ரஷ்யா தொடங்கியது.
பனிப்போர் முடிந்த 1991 ஆண்டுக்கு பின் ஜெர்மனி இணைந்த போது நேட்டோவிற்கு போட்டியாக ஆரம்பித்த வார்சா நாடுகள் கூட்டமைப்பை ரஷ்யா கலைத்தது. அதுபோல நேட்டோவிற்கான தேவை இல்லாதபோது அதையும் கலைத்திருக்க வேண்டும். ஆனால் கலைக்கவில்லை, கிழக்கு, மேற்கு என்று இருந்த ஜெர்மனியை முழுதாக நேட்டோவில் சேர்க்க வேண்டும் என்பதற்காக, இனி ஒரு இஞ்ச் கூட கிழக்கி நோக்கி விஸ்தரிக்கப் படமாட்டாது என்று அமெரிக்கா சத்தியம் செய்தது.
பின்னாளில் அதை பல முறை மீறியது நேட்டோ, ரஷ்யாவின் எச்சரிக்கையை அது பொருட்படுத்தவில்லை. ஆனால் உக்ரைனை அது நேட்டோவின் கீழ் கொண்டு வந்து விட்டால் எளிதில் ரஷ்யாவிற்குள் ஊடுறுவ முடியும். மேலும் கருங்கடலை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் ரஷ்யாவை உலக நாடுகளின் வர்த்தக தொடர்பை துண்டித்து விடலாம் என்பது அமெரிக்காவின் நோக்கம்.
புரியவில்லையா? இன்று நாம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க, அது கிரீமியா மூலம் கருங்கடல் வழியாக கச்சா எண்ணெயை நமக்கு கொடுக்கவே அதற்கு போக்குவரத்து செலவு அதிகம் ஆகிறது என்பதால் நாம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இதுவரை வாங்கவில்லை. இன்று தள்ளுபடியில் கொடுப்பதால் வாங்குகிறோம்.
இதற்கே இப்படி என்றால், கருங்கடல் நேட்டோவின் கட்டுக்குள் வந்தால், ரஷ்யா வடக்கில் உள்ள ஆர்க்டிக் கடல் வழியாகவே கச்சா எண்ணெய் போன்ற வாணிபம் செய்ய முடியும். அப்படி செய்தால் பெரும் தொகை போக்குவரத்திலேயே போய் விடும் எனும் போது யாரும் ரஷ்யாவிடம் பொருளாதாரம் செய்ய மாட்டார்கள் என்பது நேட்டோ நாடுகளின் கணக்கு மட்டுமல்ல உண்மையும் கூட. இதை நன்கு அறிந்த ரஷ்யா, உக்ரைன் நேட்டோவில் சேர அனுமதித்தால் அதன் வீழ்ச்சி நிச்சயம் என்பதால் அதை அனுமதிக்கவில்லை. எனவே போர் தொடுத்தது ரஷ்யா, ஆனால் அதை தூண்டியது நேட்டோ என்பதை விட அமெரிக்கா என்பதே சரி.
இந்த சூழலில், போர் ஆரம்பித்து 7 மாதங்கள் முடிகிறது. ரஷ்யாவின் பலத்திற்கு அது முழு உக்ரைனையும் கைப்பற்றி இருக்க வேண்டும். ஆனால் அது கைப்பற்றிய தலைநகரான கிவ் உட்பட பல பகுதிகளை விட்டுவிட்டு வெளியேறியது. ஏன் என்றால் அங்குள்ள மக்கள் விரும்பாவிட்டால், அது ஆஃப்கானிஸ்தானில் நடந்தது போல அதற்கு வாழ்நாள் தலைவலியாகிவிடும். கைப்பற்றிய பகுதிகளில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, ரஷ்யாவுடன் சேர விருப்பமா? அல்லது உக்ரைனில் தொடர வேண்டுமா? அல்லது தனி நாடாக இருக்க விரும்புகிறீர்களா? என்று கருத்து கணிப்பு செய்தனர். அப்போது அவர்கள் விருப்பம் உக்ரைன் என்றதால், அந்த பகுதிகளை விட்டு ரஷ்ய ராணுவம் வெளியேறியது. அதே சமயம் ரஷ்ய இனத்தவர்கள் வாழ்ந்த வடகிழக்கு பகுதி ரஷ்யாவுடன் சேர விரும்பியதால் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது போன்று உலகில் ஏதாவது நாடு செய்துள்ளதா? அமெரிக்கா தான் செய்துள்ளதா?
ஆனால் இதைத்தான் அமெரிக்க மீடியாக்கள் ரஷ்யா படைகள் பின் வாங்கி ஓடியதாக கூறி வருகின்றன. அது மட்டுமல்ல, ரஷ்யா தனது பழைய T72 ரக டாங்குகளை போரில் பயன்படுத்தியது. அது T90 போன்ற எலெக்ட்ரானிக் போர் யுத்தம், மற்றும் தற்காப்பு எல்லாம் இல்லாததால், 11 ஆண்டுகளுக்கு முன்பே அதை காயலாங்கடைக்கு போட முடிவெடுத்தது. ஆனாலும் ரஷ்யாவின் சிக்காலான பொருளாதர சூழலில் அதை ரிசர்வ் ஆயுதமாக வைத்திருந்தது. அதை படைபலம் இல்லாத உக்ரைனுடனான போரில் பயன்படுத்த, நவீன டாங்கு எதிர்ப்பு நவீன கருவிகள் மூலம் அவற்றில் சிலவற்றை தாக்கி உக்ரைன் அழித்தது. ஆனால் அமெரிக்க மீடியாக்கள் அதை அமெரிக்க டாங்குகள் தரைமட்டம், ரஷ்ய வீரர்கள் டாங்குகளை விட்டு விட்டு ஓடிவிட்டார்கள் என்று செய்தியாக்கி பரவ விட்டு, உலக மக்களை நம்ப வைத்தது.
அது மட்டுமல்ல, அமெரிக்காவிடமும் இது போன்ற பல காயலாங்கடைக்கு வீசும் நிலையில் ஆயுதங்கள் இருக்கிறது. அதை இப்போது அமெரிக்கா, உக்ரைனுக்கு கடனாக கொடுக்கிறது. அதாவது காயலாங்கடைக்கான பொருளை, சந்தடி சாக்கில் உக்ரைன் தலையில் அமெரிக்கா கட்டிவிட்டு, அதை கடன்காரன் ஆக்கிவிட்டது. நாளை இந்த கடனுக்கு கோதுமை, தாதுப்பொருள் என்று இலவசமாக வாங்கிக்கொண்டு அதை வாழ்நாள் எல்லாம் வட்டி கொடுக்கும் பிச்சைக்காரன் ஆக்கிவிடும்.
இது போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு ரஷ்யா மீது ஒரு அடிவைத்தால், ரஷ்யா பத்து அடி அடிக்கிறது. அப்படித்தான் தற்கொலை படை மூலம் கிரீமியாவில் ஒரு பாலத்தை அமெரிக்க உதவியுடன் வெடி வைத்து தகர்க்க, கோபம் கொண்ட ரஷ்யா, உக்ரைன் முழுவதும் உள்ள முக்கிய இடங்களை தொடர் ஏவுகணை தாக்குதலால் தரை மட்டம் ஆக்கிவிட்டது. அதில் மிகப்பெரிய மின்சாரத்தை உக்ரைன் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இதுவரை கொடுத்து வந்தது. அந்த மின்நிலையத்தை இதுவரை எதுவும் செய்யாம மனிதாபிமானத்தோடு விட்டு வைத்திருந்த ரஷ்யா, இப்போது மொத்தமாக முடித்து விட்டது. அதனால் உக்ரைன் ஐரோப்பிய யூனியனுக்கு மின்சாராத்தை நிறுத்தி விட்டது. ஐரோப்பிய யூனியன்களோடு, உக்ரைன் மக்களுக்கும் மின்சாரம் இல்லை. ஏற்கனவே கிவ் அருகில் உள்ள அதன் மிகப்பெரிய அணுமின் நிலையம் மூடப்பட்டுவிட்டது.
அது மட்டுமல்ல, S300 போன்ற வான்கப்பு பாதுகாப்பு போன்ற கவசத்தை ரஷ்யா தட்டி தூக்கிவிட்டது. இத்தனைக்கு காரணம் உக்ரைன் நாட்டின் பிரதமர் தான். அவரை அமெரிக்கா தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது. அதன் ஆலோசனைப்படி, அது மக்கள் வாழும் பகுதி, மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் போன்ற இடங்களில் புகுந்துகொண்டு மனித கேடயமாக்கி ரஷ்ய படைகளை தாக்கினால், ரஷ்யா திருப்பி தாக்குகிறது. அதில் மக்கள் உயிரிழப்பு ஏற்படுவது சாத்தியமே, உடனே அதை போர் விதிகளை மீறி மக்களை ரஷ்யா தாக்குகிறது என்று மேற்கத்திய நாடுகளையும், நோட்டோ நாடுகளையும் அமெரிக்கா முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு இனொரு காரணம், இந்திய பிரதமர் மோடி சில சமரசங்களை பேச்சு வார்த்தை மூலம் சரி செய்ய முயன்றார். ஆனால் அமெரிக்காவின் திட்டமிட்ட சதியால், இந்த நரித்தந்திர தாக்குதல்கள் நிகழ, அந்த பேச்சு வார்த்தை முறிந்தது. அது மட்டுமல்ல, உக்ரைன் பிரதமர் போடும் வேடிக்கையான கண்டிஷன் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமானால் புடினை பதவியில்மிருந்து நீக்க வேண்டுமாம். இதையும் கைதட்டி வரவேற்க ஒரு அறிவாளி கூட்டம் உள்ளது.
இந்த சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வடக்கு பைப்பலைனை யாரோ தாக்க அந்த பைப் லைன் சேதம் ஆகிவிட்டது. அதை போர் சூழலில் எளிதல் அடைக்க முடியாததால், அதை பழுதுபார்க்க ரஷ்யா கேஸ் சப்ளையினை நிறுத்தி உள்ளது. ஆனால் அதை செய்தது ரஷ்யா என்று அமெரிக்கா சொல்ல, ரஷ்யா இதனை மறுத்து ஜோ பிடன் முன்பு பேசிய பேச்சு இப்போது வெளிவர துவங்கி உள்ளது. இதன்பின் பைப் லைன் உடைப்பிற்கு காரணம் அமெரிக்கா என்பது வெட்ட வெளிச்சமாகியது. அதன் மூலம் கஷ்டங்களை அனுபவிப்பது அமெரிக்கர்கள் அல்ல, அமெரிக்காவை நம்பிய ஐரோப்பியர்களே!
புடின் இந்த போரை பெரிய அளவில் நடத்தாமல், குளிர்காலம் வரும் வரை தொடர்ந்தால், குளிரில் சிக்கி தவிக்கும் நேட்டோ நாடுகளின் மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள். விளைவு, அந்த நாடுகள் நேட்டோவில் இருந்து விலக வேண்டி வரலாம். அதாவது பறப்பதை பிடிக்க போய், இருந்ததும் போய் விட்டது என்ற நிலை வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.
இதில் ரஷ்யாவும் பல பிரச்சினைகளை சந்திக்கிறது. அதன் சில வீக்னெஸும் வெளிவரத்தான் செய்கிறது. ஆனால் அமெரிக்க மீடியா சொல்வது போல முழு பூசணிக்காயை சோற்றில் எல்லாம் ரஷ்யா மறைக்கவில்லை, மறைக்கவும் முடியாது, அதை செய்வது நேட்டோ நாடுகள் தான்.
இந்தப்போரில் நாசமாக போனது உக்ரைன். அடுத்து பொருளாதார ரீதியல் மிக மோசமாக பாதிக்கப்பட்டது ஐரோப்பிய யூனியன் நாடுகள். அந்த ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவின் டாலருக்கு போட்டியாக இருக்கும் நாடுகள். இப்போது அதன் அழிவில் உடனே லாபமடைவது அமெரிக்கா. அடுத்து உலக நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பிரச்சினையால் டாலர் டிமாண்ட் அதிகமாகி கடும் வீழ்ச்சியை கண்டு வருகின்றன. இதிலும் லாபம் அடைவது அமெரிக்கா தான்.
ஆம் அமெரிக்கா தன்னை காத்துக்கொள்கிறது. அதன் மூலம் அதற்கு போட்டியாக இந்தியா, சீனா போன்று வளரும் நாடுகளையும் தந்திரமாக வீழ்த்துகிறது. உலகத்தின் உழைப்பை ஒட்டுண்ணியாக உறிஞ்சுவது அமெரிக்கா தான்.
உலகத்தின் மிக மோசமான நாடு என்றால் அது அமெரிக்காவாக தான் இருக்கும். ட்ரம்ப் வந்த பின் அடைந்த மாற்றம், இப்போது இருக்கும் அமெரிக்க அதிபரால் வீழ்ந்து விட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu