/* */

நாட்டுக்கு என்ன செய்தார் மோடி..?

நாடு பற்றிய எந்த கவனமும் இல்லாமல் கேள்வி கேட்பவர்களின் அறியாமை, பொறுப்பின்மையை பார்த்து கோபம் தான் வருகிறது.

HIGHLIGHTS

நாட்டுக்கு என்ன செய்தார் மோடி..?
X

தேனி பா.ஜ.க., வர்த்தகபிரிவு மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராம் நாடார்.

மோடி நாட்டுக்கு என்ன செய்தார் என்பது குறித்து பா.ஜ., வர்த்தக பிரிவு தேனி மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராம் நாடார் கூறியதாவது:

கடன் வாங்காமல் பட்ஜெட் போட கூட முடியாத நிலைமையில் ஊழல் தலைவிரித்து ஆடிய ஒரு பெரிய நாட்டுக்கு பொறுப்பேற்ற மோடி இந்தியாவில் செய்த நன்மைகளை அவ்வளவு எளிதில் பட்டியல் போட்டு விட முடியாது. கொரோனா காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரமும் கவிழ்ந்து கிடந்த நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தையும், இந்திய மக்களின் உயிரையும் காப்பாற்றினார்.

மக்கள் நெரிசல் குறைந்த பல நாடுகளே அதிகளவு உயிரிழப்பை சந்தித்த நிலையில், உலகில் அதிக மக்கள் கொண்ட, அதிகளவு நெரிசலுடன் மக்கள் வாழும் நாட்டினை எப்படி பாதுகாத்தார். எத்தனை கோடி உயிர்களை பாதுகாத்தார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இன்னும் சொல்கிறேன் கேளுங்கள்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தினார். வரியை ஒழுங்குபடுத்தினார். விலையேற்றத்தை தடுத்து நிறுத்தினார். வெளியுறவை மேம்படுத்தி உலக நாடுகளை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வரச்செய்தார். வடகிழக்கில் வளராமலே கிடந்த மாநிலங்களை புணரமைத்து அங்கு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டார்.

மின் பற்றாக்குறையால் நாடே இருண்டு கிடந்த அவலத்தை மாற்றி, பல ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி செய்து கொடுத்தார். குறிப்பாக 21ஆயிரம் கிராமங்களுக்கு புதிய மின்வசதியும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். கோடிக்கணக்கான இலவச எரிவாயு கொடுத்து வருகிறார். இந்தியா முழுவதும் ஏழை வீடுகளில் 8 கோடி புதிய கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளார். கங்கை நதியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தி வருகிறார்.

கங்கை தற்போது தான் புனித நதிக்கான அந்தஸ்த்தினை பெற்றுள்ளது. போலியாக செயல்பட்டுவந்த வங்கி கணக்குகள் நிறுவனங்கள், மற்றும் பல நியமனங்களை களைந்து அத்தனையும் சரி செய்துள்ளார். வெறும் எண்ணிக்கை அளவில் பெரிய இராணுவம் என்றிருந்ததை மாற்றி உலகின் வலிமையான இராணுவம் அமைத்து எதிரிகளை நிலைகுலைய வைத்துள்ளார்.

பல்வேறு காப்பீடுகள் தந்து, திவாலாக இருந்த வங்கிகளை மீட்டுள்ளார். இன்று இந்தியாவின் வங்கித்துறை உலகின் மிகச்சிறந்த வலுவான வங்கித்துறையாக உள்ளது. இழுத்து மூடப்படும் நிலையில், இருந்த அஞ்சல்துறையை காப்பாற்றியுள்ளார் வருமான வரியில் சலுகை தந்துள்ளார். மருந்து விலையை குறைத்துள்ளார். 50 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் மருத்துவ காப்பீடு கொடுத்துள்ளார். விவசாயிக்கு பென்சன் கொடுத்து வருகிறார்.

உணவு உற்பத்தியை பெருக்கியுள்ளார். அந்நிய செலாவணியை பெருக்கி நாட்டின் டாலர் கையிருப்பை உயர்த்தியுள்ளார். பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் ஏறினாலும் மற்ற அனைத்து பொருட்களையும் விலையேற்றும் பதுக்கல்காரர்களின் சூழச்சியை முறியடித்து, வரிஏய்ப்பு செய்தவர்களை வலிக்காமல் வரிகட்ட வைத்துள்ளார். பெரிய அளவில் கருப்பு பணத்தை ஒழித்து, ஊழல் வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளார்.

இத்தனை எதிரிகள் சூழ்ந்து எதிர்த்து வரும் நிலையிலும் ஒரு மத்திய அமைச்சர் கூட ஊழல் செய்தார் என்ற கெட்ட செய்தியே இல்லாமல் செய்துள்ளார். ஒரே தவணையில் நாட்டில் இதுபோன்ற எவ்வளவோ நல்ல மாற்றங்களை கொடுத்த நம் பிரதமர் நரேந்திரமோடியை பார்த்து போதை தெளியாதவர் ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்வதுபோல மோடி அப்படி என்ன செய்தார்னு கேட்குறீங்களே இன்னும் என்னதான் செய்யனும்? அவர் நாட்டிற்கு செய்ததை சொன்னால் இரண்டு நாட்களாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பாரத நாட்டிற்கு அவர் செய்ததைப் போல் வேலை செய்ய இதுவரை யாரும் பிறக்கவில்லை. இனியும் பிறக்கப்போவதில்லை.

அல்லது நீங்கள் எதிர்பார்த்ததை செய்ய வேற யாராவது இந்த நாட்டில் பிரதமர் வேட்பாளருக்கான தகுதியுடன் இருக்கிறீர்களா என்று சிந்தித்துப்பாருங்கள். மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் நாடு வளர்ந்த விதத்தை பாருங்கள். ஊழல் எப்படி குறைந்துள்ளது என்பதை கவனியுங்கள். சட்டவிரோத செயல்கள், தீவிரவாதம் எப்படி முறியடிக்கப்பட்டுள்ளது என்பதை பாருங்கள். இவ்வாறு கூறினார்.

Updated On: 3 April 2024 3:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...