மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: மீட்க குதித்த தந்தையும் காயம்
பைல் படம்.
தேனி அருகே போடி பொட்டிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமராஜ், 36. இவரது மனைவி வீரமணி, (30). கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு ராஜபாண்டி என்ற ஐந்து வயது மகனும், ஈஷாஸ்ரீ என்ற நான்கு வயது குழந்தையும், ஜீவிதாஸ்ரீ என்ற இரண்டு வயது குழந்தையும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கணவன் மீது இருந்த கோபத்தால் மனம் உடைந்த வீரமணி தனது மூன்று குழந்தைகளுடன் அருகில் இருந்த தனியார் கிணற்றில் குதித்தார். இதனை அறிந்த ராமராஜூம் தன் மனைவி, குழந்தைகளை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.
60 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஐந்து பேரும் குதித்ததால், அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. கிணற்றுக்குள் இருந்து நீண்ட நேரம் அலறல் சத்தம் கேட்டதால், அந்த வழியாக சென்ற கிராம மக்கள் எட்டிப் பார்த்துள்ளனர். ஐந்து பேர் உள்ளே காயத்துடன் கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சின்னமனுார் தீயணைப்பு படையினர், போலீசார் சென்று கயிறு கட்டி ஐந்து பேரையும் மீட்டனர்.
பலத்த காயமடைந்த இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தேவாரம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu