முல்லைப்பெரியாறில் கேரளாவிற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தம்

முல்லைப்பெரியாறில் கேரளாவிற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தம்
X

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து, நீர் மட்டம் குறைந்ததால் கேரளாவிற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் கடந்த ஒரு மாதமாக பெய்த பலத்த மழை நான்கு நாட்களாக குறைந்துள்ளது. இதனால் நீர் வரத்து விநாடிக்கு 1800 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு 2172 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. இதனால் அணையில் இருந்து கேரளாவிற்கு திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்திருந்தால், அதாவது ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியிருக்கும். ரூல்கர்வ் முறையினை அமல்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!