பெரியகுளம் கண்மாயில் நீரை திறந்து விட்ட ஆக்கிரமிப்பாளர்கள்

பெரியகுளம் கண்மாயில் நீரை திறந்து விட்ட ஆக்கிரமிப்பாளர்கள்
X

பெரியகுளம் கண்மாயில் திறக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

பெரியகுளம் கண்மாயில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் நீரை திறந்து வீணாக வெளியேற்றி வருகின்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் கண்மாய் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் நிரம்பி வழிகிறது. கண்மாய் நிரம்பியதால் அந்த கண்மாயின் நீர் தேக்கப்பரப்பினை ஆக்கிரமித்து, விவசாயம் செய்திருந்த நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாய பயிர்கள் அழுக தொடங்கி உள்ளன.

எனவே ஆக்கிரமிப்பாளர்கள் கண்மாயின் நீர் மட்டத்தை குறைக்கும் வகையில், அதிகாலையில் கண்மாயில் இருந்து நீரை திறந்து விட்டுள்ளனர். தாம்புமடையினை சேதப்படுத்தி தண்ணீரை திறந்து விட்டு வீணாக வெளியேற்றி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்களின் தொல்லை பல ஆண்டுகளாகவே உள்ளது. பொதுப்பணித்துறையால் ஆக்கிரமிப்பாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கிடுக்குப்பிடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி கண்மாய் நீரை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!