முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!
முல்லைப்பெரியாறு அணை
தேனி மாவட்டம் பெரியாறு அணை நீர் மட்டம் 140 அடியை எட்டி விட்டது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2050 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாய், பி.டி.ஆர்., கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் முல்லைப்பெரியாற்றில் விநாடிக்கு 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு 18ம் கால்வாயிலும், பி.டி.ஆர்., கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் முல்லைப்பெரியாற்றில் நீர் திறப்பு விநாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. முல்லைப்பெரியாற்றில் அந்த அளவு அதிகம் நீர் வருகிறதோ அந்த அளவு அதிக அழுதத்தில் வேகமாக கால்வாய்களில் நீர் செல்லும்.
ஆனால் கால்வாய்களில் நீர் திறந்த நிலையில் திடீரென முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது விவசாயிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. காரணம் அப்போது அதாவது நேற்று காலை வரை பெரியாறு அணைக்கு விநாடிக்கு 5000ம் கனஅடிக்கும் மேல் நீர் வந்து கொண்டிருந்தது.
இவ்வளவு நீர் வரும் போதும் அணையை மூடியது ஏன் என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை உணர்ந்த பொதுப்பணித்துறையினர் நீர் திறப்பினை 300 அடியாக உயர்த்தினர். தற்போது முல்லைப்பெரியாற்றில் விநாடிக்கு 300 கனஅடி மட்டுமே நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீரில் இருந்து 18ம் கால்வாயிலும், பி.டி.ஆர்., கால்வாயிலும் தண்ணீர் வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் இரண்டு கால்வாய்களிலும் நீர் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தவே தற்போது நீர் திறப்பில் சிக்கனம் கடைபிடிக்கப்படுகிறது என்றே தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த பதிலால் விவசாயிகள் மத்தியில் திருப்தி ஏற்படவி்ல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu