130 அடிக்கும் கீழே வந்தது பெரியாறு அணை நீர் மட்டம்

130 அடிக்கும் கீழே வந்தது பெரியாறு அணை நீர் மட்டம்
X

வைகை அணை படம்.

பெரியாறு அணையின் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இன்று காலை 129.65 அடியாக குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை இல்லை. நீர் வரத்து மெல்ல, மெல்ல குறைந்து விநாடிக்கு 100 கனஅடிக்கும் குறைவாக உள்ளது. அணையில் இருந்து பாசன வசதிக்காக விநாடிக்கு 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் மெல்ல, மெல்ல குறைந்து பிப்., 15ம் தேதி வியாழன் அன்று காலை 7 மணிக்கு 129.65 அடியாக வந்து விட்டது. இந்த சூழலில் தான் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.

வைகை அணை நீர் மட்டம் 68.70 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1200 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2069 கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 50.80 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.46 அடியாகவும், சண்முகாநதி அணை நீர் மட்டம் 43.90 அடியாகவும் உள்ளது. சோத்துப்பாறை அணை தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக நிறைந்து வழிகிறது.

அணைகளில் நீர் மட்டம் சராசரியாக குறைந்து வந்தாலும், தற்போதய நீர் இருப்பு திருப்திகரமான நிலையில் உள்ளது. இதனால் பாசனத்திற்கோ, குடிநீருக்கோ தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story