கிராமங்களில் தண்ணீர் மூலம் பரவும் காய்ச்சல்

கிராமங்களில் தண்ணீர் மூலம் பரவும் காய்ச்சல்
X
கோப்புப் படம் : சுகாதாரமில்லாத தண்ணீர் விநியோகம் குறித்தது
பல கிராமங்களில் தண்ணீர் சுகாதாரமான முறையில் விநியோகிக்கப்படாததால், காய்ச்சல் பரவி வருகிறது என சுகாதாரத்துறை புகார் எழுப்பி உள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் தண்ணீர் சுகாதாரமான முறையில் விநியோகிக்கப்படாததால், காய்ச்சல் பரவி வருகிறது என சுகாதாரத்துறை புகார் எழுப்பி உள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று பயத்துடன் காணப்படுகின்றனர்.

இது குறித்து தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றியம் எண்டப்புளி கிராமத்திற்கு உட்பட்ட எண்டப்புளி, அண்ணாநகர், இ.புதுக்கோட்டை பகுதிகளிலும் மற்ற ஒன்றியங்களில் உள்ள சில கிராமங்களிலும் காய்ச்சல் அதிகம் பரவுகிறது.

மாவட்டம் முழுவதும் பெரும்பாலான உள்ளாட்சிகளில் இப்படித்தான் சுத்தம் செய்யப்படாத தொட்டியில் தண்ணீர் ஏற்றி மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

இது குறித்து நாங்கள் ஆய்வு செய்த போது சுத்திகரிக்கப்படாத தண்ணீர் சப்ளை செய்யப்படுவதே காய்ச்சலுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தற்போது காய்ச்சலுக்காக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தண்ணீர் மூலம் தான் இந்த காய்ச்சல் பரவுகிறது என்பதை எங்களது பரிசோதனையில் உறுதி செய்துள்ளோம். எனவே உள்ளாட்சிகள் குடிநீரை குளோரினேஷன் செய்து சுத்திரித்த பின்னரே விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.

பொதுமக்களும் உள்ளாட்சிகள் சப்ளை செய்யும் குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்த பின்னர் குடிப்பதே நல்லது. தற்போது தேனி மாவட்டம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரைகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் உடல் நலன் பாதுகாக்கப்படும். இவ்வாறு கூறினர்.

தகவலுக்காக:

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள்

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள், நீரில் உள்ள நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களாகும். இந்த நோய்கள், மனிதர்களின் வயிறு, குடல், மற்றும் தோல் வழியாக பரவுகின்றன. தண்ணீர் மூலம் பரவும் நோய்களில் சில:

டைபாய்டு: டைபாய்டு, ஒரு பாக்டீரியா நோயாகும். இது, டைபாய்டு பாக்டீரியா தாக்கிய தண்ணீர் அல்லது உணவை உட்கொள்வதன் மூலம் பரவுகிறது. டைபாய்டு நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மற்றும் தசை வலிகள் ஆகியவை அடங்கும்.

காலரா: காலரா, ஒரு பாக்டீரியா நோயாகும். இது, காலரா பாக்டீரியா தாக்கிய தண்ணீர் அல்லது உணவை உட்கொள்வதன் மூலம் பரவுகிறது. காலரா நோயின் அறிகுறிகளில் திடீரென ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, மற்றும் வயிற்று வலிகள் ஆகியவை அடங்கும்.

ஜியார்டியாசிஸ்: ஜியார்டியாசிஸ், ஒரு ஒட்டுண்ணி நோயாகும். இது, ஜியார்டியா ஒட்டுண்ணிகள் தாக்கிய தண்ணீர் அல்லது உணவை உட்கொள்வதன் மூலம் பரவுகிறது. ஜியார்டியாசிஸ் நோயின் அறிகுறிகளில் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும்.

ஹெபடைடிஸ் ஏ: ஹெபடைடிஸ் ஏ, ஒரு வைரஸ் நோயாகும். இது, ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தாக்கிய தண்ணீர் அல்லது உணவை உட்கொள்வதன் மூலம் பரவுகிறது. ஹெபடைடிஸ் ஏ நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.

  • தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான வழிகள்
  • சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தவும்.
  • உணவை நன்றாக சமைத்து சாப்பிடவும்.
  • கழிப்பறைக்குப் பின்னர் கைகளை நன்றாக கழுவவும்.
  • குழந்தைகளுக்கு தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள், தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், இந்த நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..