குழந்தைகளுக்கு வைட்டமின் டானிக் வழங்கும் முகாம்: தேனி மாவட்ட கலெக்டர் தகவல்
தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன்
தேனி மாவட்டத்தில் 5வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வரும் நாளை(செப்-20) தேதி முதல் 25-ஆம் தேதி வரை முதல் தவணையாகவும், செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை இரண்டாம் தவணையாகவும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு தேவையான முக்கிய நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின் 'ஏ' விளங்குகிறது. வைட்டமின் 'ஏ' திரவம் வழங்குவதன் மூலம் பார்வையின்மை தடுக்கப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு தேசிய வைட்டமின் 'ஏ' குறை பாடு தடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. வைட்டமின் 'ஏ' நுண்ணூட்டச் சத்து 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 முறை கொடுப்பது அவசியமாகிறது.
தேனி மாவட்டத்தில் நாளை (செப்.20 )முதல் வரும் -25-ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு, 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவ மருந்தை வாய் வழியாகக் கொடுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது
முதல் சுற்றில் 46 ஆயிரத்து 437 குழந்தைகளுக்கும், இரண்டாம் சுற்றில் 41 ஆயிரத்து 790 குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. இந்த முகாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் எடுத்துக்கொள்ள கொள்ள வேண்டும் என என தேனிமாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu