கதிர் அடிக்கும் களங்களாக மாறிய கிராமத்து சாலைகள்
தேனி மாவட்ட கிராமத்து ரோடுகள் விவசாய உலர் கள பணிகள் நடக்கின்றன. இடம்: தப்புக் குண்டு - தாடிச்சேரி ரோடு.
தேனி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் எக்டேருக்கும் அதிக பரப்பில் மானாவாரி சாகுபடி நடந்து வருகிறது. கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, சாமை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பல்வேறு தானியங்கள், பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது இவற்றின் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது.
மாவட்டப் பகுதிகளில் தானியக் கதிர்களை தனியாக அடித்து பிரித்து எடுப்பதற்கு டிராக்டர் வாடகை அதிகம். அதனால், போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளை தானியக் கதிர்களை அடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
அறுவடையான தானியங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களை ஒட்டிச் செல்லும் கிராமத்து ரோடுகளில் காயப்போட்டு பக்குவப்படுத்தி அடித்து பிரித்தெடுத்து, காற்றில் துாவி சுத்தப்படுத்தி மூடை போட்டு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
கிராமத்து ரோடுகளை விவசாய உலர் களங்களாக பயன்படுத்துவது விவசாயிகளின் பாரம்பரிய நடைமுறைகளில் முக்கியமானது. இதனால் அந்த ரோடுகளில் பயன்படும் அத்தனை பொதுமக்களும் விவசாயிகளுக்கு தங்களது முழு ஆதரவை வழங்கி வருகின்றனர். தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட் அத்தனை ரோடுகளும் மிகவும் நல்ல முறையில் தரமாகவே உள்ளன. இதனால் விவசாயப்பணிகளுக்கு அவைகள் மிகவும் உறுதுணையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
ஆனால் எஞ்சியுள்ள தானியங்களை கழிவுகளை அப்புறப்படுத்தாமல், சாலையோரம் போட்டு விடுவதால், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், சில இடங்களில் டூவீலர்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துகளை ஏற்படுத்தி வருவதாக புகார் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu