ரஜினிக்கு மாற்றாக வருகிறாரா விஜய்

ரஜினிக்கு மாற்றாக  வருகிறாரா விஜய்
X
Vijay Political Entry தமிழக அரசியல் களத்தில் ரஜினி வராததால் இருக்கும் இடைவெளியை நிரப்ப விஜய் வந்துள்ளார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

Vijay Political Entry

பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன்... என உறுதி அளித்து வந்த ரஜினி... அதற்கான வேலைகளை எல்லாம் முடித்து விட்டு... ஓரிரு நாளில் கட்சி தொடங்கி விடுவார் என்ற சூழல் உருவான நிலையில் திடீரென எனது உடல் ஒத்துழைக்கவில்லை எனக்கூறி பின்வாங்கி விட்டார். அவர் கூறிய காரணம் சரி எனப்பட்டதால், அப்போது மக்களும் ‘‘ரஜினி ஆள்வதற்கு வராவிட்டாலும் பரவாயில்லை... நன்றாக வாழ்ந்து மகிழ்வித்தால் போதும்’’ என அவரை இன்னும் கொண்டாடி வருகின்றனர்.

ஆக தமிழகத்தில் அதிரடிக்கும் அண்ணாமலை போல பல அரசியல் தலைவர்கள் இருந்தாலும், ரஜினி வராமல் இருக்கும் தமிழக அரசியல் பூங்கா சற்று வெறிச்சோடிக்காணப்படுவதாகவே இன்னும் பலர் நினைத்து வருகின்றனர். இந்த நிலையில் சினிமாவில் ரஜினி காலத்திலேயே அவருக்கு இணையாகவோ, அல்லது அவரை விட சற்று அதிகமாகவோ கொண்டாடப்பட்டவர் விஜய். இதுவரை எந்த அரசியல் கட்சி சாயமும் இல்லாதவர். இதனால் ரஜினிக்கு மாற்றாக விஜய் வர வேண்டும். அவரது அரசியல் இடத்தை நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் இருந்து கொண்டே தான் இருந்தது.

Vijay Political Entry


அதேசமயம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்த ஒரு அரசியல் கட்சி தான் விஜய்யையும் தற்போது கொண்டு வந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு பலநுாறு கோடி சம்பாதிக்கும் விஜய் சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு என்ன வேண்டுமானாலும் நல்லது செய்யலாம். ஆனால் அவர் அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை. அந்த குறிப்பிட்ட தேசியக்கட்சி தான் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளது என்ற கருத்தும் இருந்து வருகிறது.

Vijay Political Entry


இதற்கு மாற்றாக கமல்ஹாசனை அரசியலுக்கு கொண்டு வந்தவர்கள்... அதில் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், தற்போது விஜய்யை களம் இறக்கி உள்ளனர் என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. எது எப்படியோ ஒருவர் கூட விஜய்க்கு ஏன் வேண்டாத வேலை? என்ற கேள்வி எழுப்பவில்லை. அத்தனை பேரும் விஜய்யின் வருகையை வரவேற்றுள்ளனர். அத்தனை அரசியல் கட்சிகளும் அவரை வரவேற்றுள்ளனர்.

இப்போது உள்ள சூழ்நிலையை கணித்து வரும் அரசியல் விமர்சகர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், ‘விஜய் சுயமாக வந்தாரா? மற்றவர்களின் துாண்டுதலின்படி வந்தாரா? என்பது இப்போது முக்கியமல்ல. அவரது வருகை யாரை பாதிக்கும் என்பது தான் தற்போதைக்கு பரபரப்பான விவாதப்பொருளாகி வருகிறது. தவிர விஜய்யின் வருகை நிச்சயம் தமிழக அரசியலில் பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்தும். விஜய்யும் நிச்சயம் அரசியல் நெருக்கடிகளை தாங்கி வெற்றி பெறுவார் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story