தேனி மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்

தேனி மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்
X

போடி அருகே மணியம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவமுகாமில் கிராம பிரமுகர்கள் கால்நடைகளை அழைத்து வந்தனர்.

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை தடுக்க மாவட்டம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டத்தில் காணை நோயினை தடுக்கும் வகையில் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் சேர்ந்து கால்நடைத்துறை மருத்துவ முகாம் நடத்தி வருகிறது.

தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வாய் காணை, கால் காணை, கோமாரி நோய் பரவி வருகிறது. இதனை தடுக்க கிராம ஊராட்சி அமைப்புகளுடன் சேர்ந்து கால்நடைத்துறை சிறப்பு முகாம் நடத்தி, பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு ஊசி, மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறது. தவிர ஆடு, கோழிகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போடி மணியம்பட்டியில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத்தலைவர் கண்ணன், ராசிங்காபுரம் கால்நடை உதவி மருத்துவர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஒவ்வொரு கால்நடை மருத்துவமனையும், தங்கள் பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளுடன் இணைந்து தினமும் ஒரு முகாம் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. எனவே தொடர்ச்சியாக முகாம்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு