தேனி உழவர்சந்தையில் ஒரே நாளில் ரூ.60 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை
தேனி உழவர் சந்தை
நேற்று சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது. அன்று பக்தர்கள் விரதம் இருந்து சனிக்கிழமை இரவு முழுவதும் விழித்திருந்து, காலை, மதியம் ஏகாதசி விரதம் இருப்பார்கள். அப்போது வழக்கத்தை விட அதிகளவு காய்கறிகள் பொறியலுடன் சாப்பாடு இருக்கும்.
இன்று துவாதசி திருநாள் என்பதால், காய்கறிகள் வாங்க நேற்று பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டினர். தேனி உழவர் சந்தையில் கூட்டம் அலைமோதியது. உழவர் சந்தைக்குள் உள்ள வளாகத்தில் மட்டும் 33 டன் காய்கறிகள் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. சந்தைக்கு வெளியே ஏராளமான விவசாயிகள் கடை போட்டிருந்தனர். அவர்களிடமும் அதே அளவு காய்கறிகள் விற்பனையானது.
ஆக மொத்தம் உழவர்சந்தையின் ஒட்டுமொத்த வளாகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 60 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்கப்பட்டதாக சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலை விரதம், முருக பக்தர்கள் விரதம், பெருமாள் பக்தர்கள் விரதம் என விரதங்கள் களை கட்டினாலும், காய்கறிகளின் விலைகள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. சுமாரான விலை உயர்வு மட்டுமே இருந்தது பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை தேனி உழவர்சந்தை காய்கறிகள் விலை விவரம்:
கிலோவிற்கு ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தரிக்காய் - 65, தக்காளி - 30, வெண்டைக்காய் - 48,
கொத்தவரங்காய் - 40, சுரைக்காய் - 15, புடலங்காய் - 25,
பாகற்காய் - 50, பீர்க்கங்காய் - 38, பூசணிக்காய் - 16,
பெல்ட் அவரைக்காய் - 80, தேங்காய் - 34, உருளைக்கிழங்கு - 40,
கருணைக்கிழங்கு - 45, சேப்பங்கிழங்கு - 60, மரவள்ளிக்கிழங்கு - 25,
வெற்றிலை வள்ளிக்கிழங்கு - 38, கருவேப்பிலை - 55, கொத்தமல்லி - 60,
புதினா - 35, சின்னவெங்காயம் - 60, பெல்லாரி - 36,
பீட்ரூட் - 40, நுால்கோல் - 40, முள்ளங்கி - 52,
முருங்கைபீன்ஸ் - 80, பட்டர்பீன்ஸ் - 180, சோயாபீன்ஸ் - 115,
செலக்சன் பீன்ஸ் - 60, முட்டைக்கோஸ் - 25, கேரட் - 38,
டர்னிப் - 32, சவ்சவ் - 24, காலிபிளவர் - 30,
பச்சைப் பட்டாணி - 58, மொச்சைக்காய் - 60, துவரைங்காய் - 56,
தட்டாங்காய் - 74, பட்டை அவரைக்காய் - 80 என விற்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu