தேனி உழவர்சந்தையில் காய்கறிகள் விலை சரிவு

தேனி உழவர்சந்தையில் காய்கறிகள் விலை சரிவு

காய்கறி விலையில் சரிவு (கோப்பு படம்)

தேனி உழவர்சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

தேனி உழவர்சந்தையில் கடந்த ஜனவரி மாதம் வரை காய்கறிகளின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகும் அளவுக்கு விலை கிடைத்தது. சபரிமலை சீசன் முடிந்ததும் காய்கறிகள் விலை குறைய தொடங்கியது. தைப்பூசம் நிறைவடைந்ததும் விலை மேலும் குறைந்தது. கிலோ ஐம்பது ரூபாயினை தொட்ட காய்கறிகள் முழுவதும் தற்போது கிலோ 20 ரூபாய்க்கே கிடைக்கிறது. தற்போது வளர்பிறை முகூர்த்தம் என்றாலும் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

குறிப்பாக 58 ரூபாய் வரை விற்ற கத்தரிக்காய் தற்போது 20 ரூபாய் ஆக குறைந்துள்ளது. பிற காய்கறிகளின் விலையை பார்க்கலாம். கிலோவிற்கு ரூபாயில் குறிக்கப்பட்டுள்ளது.

தக்காளி முதல்ரகம்- 30, வெண்டைக்காய்- 40, கொத்தவரங்காய்- 38, சுரைக்காய்- 15, புடலங்காய்- 25, பாகற்காய்- 40, பீர்க்கங்காய்- 42, முருங்கை காய்- 60, பூசணிக்காய் 30, பெல்ட் அவரைக்காய் -35 (இந்த காய் கிலோ 70 ரூபாய் வரை விற்கப்பட்டது), தேங்காய்- 30, உருளைக்கிழங்கு- 40, கருணைக்கிழங்கு0- 60, சேப்பங்கிழங்கு- 60, கொத்தமல்லி- 25, சின்னவெங்காயம்- 40, பெல்லாரி- 26, இஞ்சி- 115, வாழைப்பூ, வாழைத்தண்டு- 10, பீட்ரூட் (உள்ளூர் விளைச்சல் இல்லை. ஊட்டியில் இருந்து வருகிறது)- 40, நுால்கோல்- 30, முள்ளங்கி- 20, முருங்கை பீன்ஸ்- 58 (இது கிலோ 150 வரை விற்கப்ப்பட்டது. சில நேரங்களில் 200 ரூபாயினை கூட்ட எட்டியது), முட்டைக்கோஸ்- 24, சவ்சவ்- 16, காலிபிளவர்- 30, எலுமிச்சை- 50, மொச்சைக்காய்- 50, துவரங்காய்- 40, கீரை வகைகள்- 25. இவ்வாறு விற்கப்படுகிறது.

Next Story