விளைச்சல் அதிகம், விலையும் கை கொடுக்கிறது: வியாபாரிகள் மகிழ்ச்சி

விளைச்சல் அதிகம், விலையும் கை கொடுக்கிறது: வியாபாரிகள் மகிழ்ச்சி
X

தேனி உழவர் சந்தை - கோப்புப்படம் 

தேனி மாவட்டத்தில் காய்கறி விளைச்சல் அதிகம் உள்ள நிலையில், விலையும் விவசாயிகளுக்கு கை கொடுத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தேனி மாவட்டத்தில் கடந்த ஓராண்டாகவே காய்கறிகளின் விலைகள் சீராகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மழையும் நல்ல நிலையில் இருந்ததால், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தில் காய்கறி விளைச்சல் அமோகமாக இருந்து வருகிறது. தினமும் பலநூறு டன்கள் காய்கறி விளைகிறது.

இங்கிருந்து கேரளா, மற்றும் மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஒட்டன்சத்திரம், திருச்சி மார்க்கெட்டுகளுக்கும், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கும் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் விலைகள் பெரிய அளவில் அடி வாங்கவில்லை. சீராகவே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நஷ்டம் என்றும் சொல்ல முடியாது. ஏதோ ஓரளவு வருவாய் மட்டும் வருகிறது என்பது மட்டும் தான் உண்மை.

காய்கறிகளின் விலை உயர்ந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு நல்ல வருவாய் கிடைக்கும். ஆனால் கடந்த ஓராண்டாக எந்த காய்கறிகளின் விலையும் பெரிய அளவில் உயரவில்லை.

தேனி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை (கிலோவிற்கு ரூபாயில்): கத்தரிக்காய்- 24, தக்காளி- 18, வெண்டைக்காய்- 46, கொத்தவரங்காய்- 40, சுரைக்காய்- 14, புடலங்காய்- 20, பாகற்காய்- 25, முருங்கைக்காய்- 70, பூசணிக்காய்- 22, பச்சை மிளகாய் (உருட்டு) - 40, அவரைக்காய்- 50, தேங்காய்- 30, உருளைக்கிழங்கு- 24, கருணைக்கிழங்கு- 26, சேப்பங்கிழங்கு- 44, கறிவேப்பிலை- 65, புதினா- 30, சின்னவெங்காயம்- 45, பெல்லாரி- 20, இஞ்சி- 70, பீட்ரூட்- 18, நுால்கோல்- 26, முள்ளங்கி- 16, முருங்கை பீன்ஸ்- 58, சோயாபீன்ஸ்- 79, முட்டைக்கோஸ்- 10, சவ்சவ்- 18, மாங்காய்- 40, மொச்சக்காய்- 56, தட்டாங்காய்- 40, மக்காச்சோளம்- 50, கீரை வகைகள்- ரூ.20 முதல் 25 வரை விற்கப்படுகிறது.

வெளியில் விற்கப்படும் சில்லரை மார்க்கெட்டில் இதன் விலைகள் இன்னும் சற்று அதிகமக உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!