தேனி மாவட்டத்தில் விளைச்சல் குறைவால் காய்கறிகள் விலை அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் விளைச்சல் குறைவால் காய்கறிகள் விலை அதிகரிப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் விளைச்சல் குறைவாக இருப்பதால் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் பலத்த மழையால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் விலைகள் அதிகரித்துள்ளன.

தக்காளி கிலோ 60 ரூபாயினை தாண்டி உள்ளது. சின்னவெங்காயம் விலையும் 60 ரூபாயினை கடந்துள்ளது. உருளைக்கிழங்கு கிலோ 50 ரூபாய், கத்தரிக்காய் கிலோ 45 ரூபாய், வெண்டைக்காய் 50 ரூபாய், முருங்கைகாய் 60 ரூபாய், அவரைக்காய் 60 ரூபாய், பட்டர்பீன்ஸ் 200 ரூபாய், முட்டைக்கோஸ் 30 ரூபாய், டர்னிப் 50 ரூபாய், முருங்கை பீன்ஸ் 80 ரூபாய், நுால்கோல், முள்ளங்கி தலா கிலோ 35 ரூபாய் என விலைகள் அதிகரித்துள்ளன. விலை அதிகரித்து இருந்தாலும் விளைச்சல் குறைவாக இருப்பதால் லாபம் போதவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story