தேனி மாவட்ட சந்தைகளில் காய்கறிகள் விலை சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்ட சந்தைகளில் காய்கறிகள் விலை சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி
X
தேனி மாவட்ட சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.

தேனி உழவர்சந்தை, தினசரி மார்க்கெட், சில்லரை மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை லேசாக இறங்கி வருகிறது.

தேனி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்தது. கார்த்திகை மாதம் பிறந்தது முதல் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்தது. இன்று மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த விலையில் சற்று இறக்கம் தெரிகிறது. காய்கறிளின் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அனைத்து வகை காய்கறிகளும் 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை குறைந்துள்ளன. தக்காளி கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் கத்தரிக்காய் கிலோ 90 ரூபாய், வெண்டைக்காய் 90 ரூபாய், பாகற்காய் 90 ரூபாய், முருங்கைக்காய் 90 ரூபாய் அவரைக்காய் 90 ரூபாய் என விலை குறைந்துள்ளது. முன்பு இதன் விலைகள் 120 ரூபாய் வரை விற்கப்பட்டது.

கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட பட்டர்பீன்ஸ், தற்போது கிலோ 160 ரூபாய் ஆக குறைந்துள்ளது. இதேபோல் அனைத்து காய்கறிகளின் விலைகளும் சற்று இறங்குமுகமாகவே உள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை இல்லாவிட்டால் மேலும் குறையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story