உச்சத்தில் விலைவாசி; அச்சத்தில் மக்கள் - கத்தரிக்காய் 110; தக்காளி 100

உச்சத்தில் விலைவாசி; அச்சத்தில் மக்கள் - கத்தரிக்காய் 110; தக்காளி 100
X
தேனி சில்லரை மார்க்கெட்டில், காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கத்தரிக்காய் கிலோ ரூ.110; தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், காய்கறி விளைச்சல், காய்கறி பறிக்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. கார்த்திகை மாதம் மாலை அணிபவர்கள் தற்போதே விரதம் தொடங்கி உள்ளனர்.

இன்று காலை, தேனி மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் கிலோ 110 ரூபாய், தக்காளி கிலோ 100 ரூபாய், வெண்டைக்காய் 100 ரூபாய், பாகற்காய் 60 ரூபாய், பட்டை அவரைக்காய் 110 ரூபாய், முருங்கைக்காய் 80 ரூபாய், வெள்ளைப்பூண்டு 220 ரூபாய், காலி பிளவர் பூ ஒன்று 50 ரூபாய், பட்டர் பீன்ஸ் 250 ரூபாய், முருங்கை பீன்ஸ் 110 ரூபாய், காரட் 50 ரூபாய் என, விலை அதிகரி்த்து விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் அனைத்து வகையான காய்கறிகளின் விலைகளும் அதிகரித்து இருந்தன. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். காய்கறிகள் குறைந்த அளவே வாங்கி பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!