காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு... இங்கில்லை.... கேரளாவில்...

காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு...  இங்கில்லை.... கேரளாவில்...
X

பைல் படம்.

தமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் சீராக உள்ள நிலையில் கேரளாவில் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் குறைந்தது 100 டன்னுக்கும் குறையாமல் காய்கறிகள் செல்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்திருந்தன. அடுத்து புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதால் அடுத்த ஒரு மாதத்திற்கு தேவை அதிகரித்தே இருக்கும். எனவே விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

குறிப்பாக தேனியில் கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி கேரளாவில் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்படும் சின்ன வெங்காயம் அங்கு கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் என்ன விலையோ அதேபோல் இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்து கேரள மக்கள் காய்கறிகளை வாங்குகின்றனர். தேனி மாவட்டத்தில் காய்கறிகளை மொத்த மார்க்கெட் விலைக்கு வாங்கும் வியாபாரி, வாங்கிய விலையை விட இரண்டு மடங்கு அதிக விலை வைத்து விற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் விளைவி்க்கும் விவசாயிக்கு கிடைக்காத லாபம்... விற்பனை செய்யும் வியாபாரிக்கு கிடைக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!