தேனி உழவர் சந்தை விலை நிலவரம்: கண்ணீர் வரவழைக்கும் சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் - காட்சி படம்
தேனி மாவட்டத்தில் அனைத்து உழவர் சந்தைகளிலும் தக்காளி, சின்ன வெங்காயம் உட்பட அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறைவாக உள்ளன. மக்கள் வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு வாங்காமல், குறைந்த விலைக்கு உழவர்சந்தையில் வாங்குங்கள் என ஆட்சியர் ஷஜீவனா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தற்போதய நிலையில் உழவர்சந்தை விலையே பிரமிக்க வைக்கிறது. தேனி உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 125 ரூபாய்க்கும், தக்காளி கிலோ 82 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆனால் வெளிமார்க்கெட் விலையை விட சந்தையில் 25 சதவீதம் வரை விலை குறைவு தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. சின்ன வெங்காயம் வெளிமார்க்கெட்டில் கிலோ 150 ரூபாயினை தாண்டி விட்டது. தக்காளி 110 ரூபாயினை எட்டி உள்ளது. இதனால் உழவர்சந்தை விலை பரவாயில்லை என்ற நிலையே காணப்படுகிறது.
தேனி உழவர்சந்தையில் பிற காய்கறிகளின் விலை நிலவரம் கிலோவிற்கு ரூபாயில் வருமாறு:
கத்தரிக்காய்- 40, வெண்டைக்காய்- 50,
கொத்தவரங்காய்- 36, சுரைக்காய்- 18,
புடலங்காய்- 30, பாகற்காய்- 48,
பீர்க்கங்காய்- 48, முருங்கைக்காய் 49,
பூசணிக்காய்- 22, பச்சைமிளகாய் (உருட்டு)- 95,
செடி அவரைக்காய்- 48, தேங்காய்- 25,
உருளைக்கிழங்கு- 26, சேப்பங்கிழங்கு- 64,
கருவேப்பிலை- 36, கொத்தமல்லி- 38,
புதினா- 50, பெரியவெங்காயம்- 27,
இஞ்சி- 260, வெள்ளைப்பூண்டு- 280,
பீட்ரூட்- 32, நுால்கோல்- 50,
முள்ளங்கி- 25, முருங்கை பீன்ஸ்- 100,
பட்டர்பீன்ஸ்- 120, சோயாபீன்ஸ்- 120,
முட்டைக்கோஸ்- 32, கேரட்- 52,
டர்னிப்- 40, சவ்சவ்- 28,
காலிபிளவர்- 35, எலுமிச்சை- 40,
மாம்பழம்- 200, சப்போட்டா- 140,
பப்பாளி- 30, திராட்சை- 100,
மாதுளைபழம்- 180, தட்டாங்காய்- 80,
மாங்காய்- 30, மக்காச்சோளக்கதிர்- 50,
கீரைவகைகள்- 25.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu