தக்காளி கிலோ 5 ரூபாய்: அனைத்து காய்கறிகளும் சரிவு

தக்காளி கிலோ 5  ரூபாய்: அனைத்து காய்கறிகளும் சரிவு
X
தேனி மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ 5 ரூபாய் ஆக சரிந்தது. அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறைந்தன.

தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தக்காளி ஒரு கிலோ 150 ரூபாயினை எட்டியது. அப்போது விலை உயர்வு குறித்து கடினமான விமர்சனங்கள் எழுந்தன. படிப்படியாக குறைந்த தக்காளி விலை இப்போது தரையில் விழுந்து கிடக்கிறது.

மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி கிலோ 5 ரூபாய் என்ற நிலைக்கு வந்து விட்டது. சில்லரை மார்க்கெட்டில் முதல்தர தக்காளி விலையே 10 ரூபாயினை தாண்டவில்லை. அதேபோல் கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் 14 ரூபாய், புடலங்காய் 15 ரூபாய், அவரைக்காய் 20 ரூபாய், சின்ன வெங்காயம் முதல் தரம் 35 ரூபாய், இரண்டாம் தரம் 25 ரூபாய், பீட்ரூட், முள்ளங்கி, நுாக்கல் தலா 15 ரூபாய் என விலை குறைந்து விற்கப்படுகிறது. அனைத்து காய்கறிகளும் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு