ரூ.50க்கும் கீழ் வந்தது தக்காளி: மற்ற காய்கறிகள் விலை நிலவரம் என்ன?

ரூ.50க்கும் கீழ் வந்தது தக்காளி: மற்ற காய்கறிகள் விலை நிலவரம் என்ன?
X
தேனி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ளது. இதர காய்கறிகளின் விலை இன்னும் சற்று ஏறுமுகமாகவே உள்ளது.

தேனி தினசரி மார்க்கெட், உழவர்சந்தை, சில்லரை மார்க்கெட்களில் தக்காளி கிலோ 140 ரூபாய் வரை எட்டியது. இதன் விலை படிப்படியாக குறைந்து, இன்று கிலோ 50 ரூபாய்க்கும் கீழே வந்தது. கடந்த நான்கு நாட்களாக மழை இல்லாததால் விளைச்சல் சற்று அதிகரித்துள்ளது. இதனால் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தக்காளி வந்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், இதர காய்கறிகளின் விலை குறையவில்லை. கத்தரிக்காய் கிலோ ரூ.90, வெண்டைக்காய் கிலோ 90 ரூபாய், பாகற்காய் கிலோ 90 ரூபாய், முருங்கை காய், அவரைக்காய் கிலோ 90 ரூபாய், சோயாபீன்ஸ் கிலோ 120 ரூபாய், பட்டர்பீன்ஸ் கிலோ 180 ரூபாய் என விற்கப்படுகிறது. இதேபோல் எல்லா காய்கறிகளின் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது என, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!