நாளை வீரபாண்டியில் தேரோட்டம்- மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறை

நாளை வீரபாண்டியில் தேரோட்டம்-  மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறை
X
நாளை வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம் நாளை தொடங்குகிறது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெறும். நாளை தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியை கலெக்டர் முரளீதரனும், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவும் தொடங்கி வைக்கின்றனர். தேர்திருவிழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள். இதற்காக வழக்கம் போல் நாளை 13ம் தேதி வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் பிளஸ் 2 தேர்வுகள் எந்த பாதிப்பும் இன்றி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுப்பினை ஈடுகட்ட வரும் மே 28ம் தேதி சனிக்கிழமை வழக்கம் போல் அலுவலகங்கள் செயல்படும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!