முதல் போக நெல் சாகுபடிபடிக்காக வைகை அணை திறப்பு
தேனியில் வைகை அணையை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மூர்த்தி, கலெக்டர் முருளிதரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
வைகை அணையில் இருந்து நான்கு மாவட்டங்களில் உள்ள ஒரு போக நெல் சாகுபடி நிலங்களுக்கு அமைச்சர் பெரியசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, தேனி கலெக்டர் முரளிதரன், டி.ஆர்.ஓ., ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். தண்ணீர் திறந்து வைத்து அமைச்சர் கூறியதாவது: வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் ஒரு போக நெல் சாகுபடி நிலங்களுக்கு நடவு பணிகளுக்காக இன்று விநாடிக்கு 1100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் கால்வாயிலும் இந்த தண்ணீர் திறக்கப்படும். தொடர்ச்சியாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு போக நெல் சாகுபடிக்கு வழக்கத்திற்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை வைகை பாசனத்தில் தண்ணீர் பெறும் அத்தனை விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu