வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் திறப்பு: இன்று ரெட் அலர்ட்
தேனி மாவட்டத்தில் வைகை அணை திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் முழுக்க வெளியேற்றப்படுகிறது.
Red Alert Area - தேனி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை குறைவாக இருந்தாலும், பெரியாறு அணையிலும், தேக்கடியிலும் பலத்த மழை பெய்தது.
முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியை தொட்டுள்ள நிலையில் இதன் ரெட் அலர்ட் அளவு மழை பெய்யும். எனவே நீர் வரத்தின் அளவு இன்று பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்று பெரியாறு அணை நீர் மட்டம் 136.30 அடியை தாண்டியதும், கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.
வைகை அணைக்கு விநாடிக்கு 2700 கனஅடி நீர் வருகிறது. அணை நீர் மட்டம் 71 அடியை எட்டி உள்ளதால், முழு நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மஞ்சளாறு அணையும் நிரம்பி உள்ளதால், அணைக்கு வரும் 138 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையும் நிரம்பி உள்ளதால், (முழு கொள்ளவு 126 அடி) வரும் நீர் முழுக்க வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu