வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை
X

வைகை அணை.

Red Alert In Tamilnadu Today - வைகை அணையின் நீர் மட்டம் 66 அடியாக உயர்ந்துள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Red Alert In Tamilnadu Today - தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணைக்கு விநாடிக்கு 2300 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீருக்கு 66 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் மட்டம் 66 அடியை எட்டியதால், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 2000ம் கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 134.05 அடியாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!