வைகை அணை பூங்காவை மக்கள் பார்வையிட 3 நாட்களுக்கு தடை

வைகை அணை பூங்காவை  மக்கள் பார்வையிட   3 நாட்களுக்கு   தடை
X

வைகை அணை பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வைகை அணை பூங்கா மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணை பூங்கா மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் அரசு அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களை மூட அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து வைகை அணை பூங்கா இன்று முதல் வரும் ஜன. 2 -ஆம் தேதி ஞாயிறு வரை மூடப்படுகிறது. ஜன. 3ம் தேதி திங்கள் கிழமை முதல் அரசின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் திறக்கப்படும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்