திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணை திறப்பு

திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணை திறப்பு
X

வைகை அணையில் இருந்து இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

திண்டுக்கல், மதுரை பாசனத்திற்கு வைகை அணை இன்று திறக்கப்பட்டது.

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய வைகை அணை திறக்கப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். தேனி கலெக்டர் முரளீதரன், மதுரை கலெக்டர் அனீஸ், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., ஆசையன் உட்பட பலர் பங்கேற்றனர். அணையில் இருந்து விநாடிக்கு 900ம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 நாட்கள் வரை தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்ட நிலையில், வைகை அணை இன்று திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!