70 அடியை தாண்டியது வைகை அணைக்கு வரும் நீர் முழுக்க திறப்பு
தேனி மாவட்டத்தில் ஆறாவது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. ஆண்டிபட்டியில் 76.4 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 23.2 மி.மீ., வீரபாண்டியில் 42.5 மி.மீ., பெரியகுளத்தில் 21 மி.மீ., மஞ்சளாறில் 32 மி.மீ., சோத்துப்பாறையில் 32 மி.மீ., வைகை அணையில் 25.5 மி.மீ., போடியில் 22.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 7.8 மி.மீ., கூடலுாரில் 8.4 மி.மீ., பெரியாறு அணையில் 7 மி.மீ., தேக்கடியில் 14.2 மி.மீ., சண்முகாநதி அணையில் 21.6 மி.மீ., மழை பதிவானது.
இந்த மழையால் வைகை அணைக்கு விநாடிக்கு 2700 கனஅடி தண்ணீர் வந்தது. அணை நீர் மட்டம் 70 அடியை தாண்டியது. இதனால் அணை திறக்கப்பட்டு, வரும் நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது. பெரியாறு அணை நீர் மட்டம் 128.50 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 2300 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 105 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோத்துப்பாறை அணை நிரம்பி வழியும் நிலையில், மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணைகளும் நிரம்பி வருகின்றன. சுருளிஅருவி, சின்னசுருளி அருவி, கும்பக்கரை, அணைக்கரைப்பட்டி அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் யாரும் குளிக்க கூடாது என தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu