நகர்புற உள்ளாட்சி தேர்தல்: தேனி மாவட்ட வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: தேனி மாவட்ட வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், இருபத்தி இரண்டு பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த எழுநுாற்றி நாற்பத்தி நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலை கலெக்டர் முரளீதரன் இன்று வெளியிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கராஜ், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் இயக்குனர்கள் பங்கேற்றனர். இதற்கு பின்னர் நடந்த அனைத்து கட்சி பிரமுகர்கள் கூட்டத்தில் இதன் நகலை கலெக்டர் வெளியிட்டு, ஆட்சேபனைகள் இருந்தால் அரசியல் கட்சி பிரமுகர்கள் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story