நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வு செய்வதில் அதிமுக சுறுசுறுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வு செய்வதில் அதிமுக  சுறுசுறுப்பு
X

போடியில் அ.தி.மு.க.,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக, தீவிரமாக செயலாற்றி வருகிறது

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதிமுக தீவிர சுறுசுறுப்புடம் வேகம் காட்டி வருகிறது.

தேனி மாவட்டத்தில் 23 பேரூராட்சிகள், ஆறு நகராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வேட்பாளர்களுக்கான நேர்காணலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் சையதுகான், எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நேர்காணலில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று போடியில் நேர்காணல் நடைபெற்றது. ஒவ்வொரு பகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் குடும்ப பின்னணி, வெற்றி வாய்ப்பு, பொருளாதார சூழல், அரசியல் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கட்சி தலைவர்கள் நேரடியாக கேட்டு ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் பட்டியல் வெளியாகும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings