பெரியகுளம் பகுதியில் சரக்கு வாகனங்களில் பாதுகாப்பின்றி செல்லும் தொழிலாளர்கள்

பெரியகுளம் பகுதியில் சரக்கு வாகனங்களில் பாதுகாப்பின்றி செல்லும் தொழிலாளர்கள்
X

பெரியகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் சரக்கு வாகனங்களில் பயணம் செய்யும் விவசாய தொழிலாளர்கள்.

பெரியகுளம் பகுதியில் விவசாய தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.

பெரியகுளம் பகுதியில் சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.

பொதுவாக சரக்கு வாகனங்கள், கனரக வாகங்களில் தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றிச் செல்லக்கூாடது என்ற விதிமுறை உள்ளது. பெரியகுளம் பகுதியில் இதனை யாரும் கடைபிடிப்பதில்லை. இங்கு தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடப்பதால் தொழிலாளர்களை சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். திரும்பவும் அதே வாகனங்களில் ஏற்றி வந்து இறக்கி விடுகின்றனர்.

இதனால் ஏதாவது சிறு விபத்து ஏற்பட்டாலும் அதிகளவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர். பெரியகுளம் டி.எஸ்.பி., இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!