வருஷநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மாேதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

வருஷநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மாேதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

வருஷநாடு அருகே நடந்த சாலை விபத்தில் பெண் போலீஸ்காரரின் கணவர் உயிரிழந்தார்.

வருஷநாடு அருகே நடந்த சாலை விபத்தில் பெண் போலீஸ்காரரின் கணவர் உயிரிழந்தார்.

வருஷநாடு காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி 45. இவரது மனைவி செல்வராணி. இவர் மயிலாடும்பாறை போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து வருகிறார். துரைப்பாண்டியும், அவரது நண்பர் சென்றாயனும் 35 வருஷநாட்டில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்தனர். ரோடு வளைவில் திரும்பும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இச்சம்பவத்தில் துரைப்பாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். சென்றாயன் பலத்த காயமடைந்தார். கண்டமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது