அடுத்து இந்தியன் 3! அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

அடுத்து இந்தியன் 3! அப்டேட் கொடுத்த   உதயநிதி ஸ்டாலின்!
X
இந்தியன் 2 படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

1996 இல் வெளிவந்த இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படம் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரேம் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இதற்கு அனிருத் இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படம் குறித்த தகவல் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று திரைக்கு வரும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், ‘இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் (ரெட் ஜெயண்ட் நிறுவனத்திலிருந்து தற்போது வெளியே வந்துவிட்டதாக கூறப்படுகிறது), சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்,“இந்தியன் 3 படத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியன் 3 படத்தில் இடம்பெறும் வகையிலான பல காட்சிகள் இப்போதே கைவசம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 மிகச் சிறப்பாக உருவாகியுள்ளதாக நடிகர் கமலஹாசன், இயக்குனர் சங்கர் ஆகியோர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

மேலும் இந்தியன் 2 படத்தை 2024 ஏப்ரல் மாதம் திரையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இன்னும் 20 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே உள்ள நிலையில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி