இருசக்கர வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து: ரூ.1.30 கோடி பொருட்கள் சேதம்

இருசக்கர வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து: ரூ.1.30 கோடி பொருட்கள் சேதம்
X

பைல் படம்.

தேனியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

தேனி பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சங்கர், 43. இவர் ஆட்டோ ஒர்க்சாப், ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் கடை வைத்துள்ளார். இந்த கடையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கடையில் இருந்த ஆட்டோ, கார், டூ வீலர், பக்கத்தில் இருந்த தேவா சீட் கவர்ஸ் கடையின் எலக்ட்ரிக் பொருட்கள், ரெக்சின் கிளாத், ஸ்பான்ச், ஜீட் கிளாத், நுாடுல்ஸ்மேட், கவர்ஸ், சோபா, டைனிங் டேபிள் தையல் மிஷின், கம்ப்யூட்டர், மெத்தைகள், டேபிள்கள் உட்பட மொத்தம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!