கூடலூரில் புகையிலை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இருவர் கைது

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

தேனி மாவட்டம் கூடலூரில் புகையிலை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கூடலூர் நகர் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளின் அருகே போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையில் கூடலூர் வடக்கு தெற்கு காவல் நிலைய போலீசார் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலத்தை நடத்தினர். இதன் பின்பும் பள்ளியின் அருகே போதைப்பொருள்களை விற்பனை செய்வதாக பள்ளி மாணவர்கள் போலீசாருக்கு ரகசிய தகவலினை அளித்தனர். தகவலை தொடர்ந்து நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.

புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டி, கூடலூர் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!