தேனியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

தேனியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
X
தேனியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் 20. இவரும், மின்வாரிய கணக்கீட்டாளர் கண்ணன் 36, போஸ்ட்மேன் பழனிச்சாமி 36, நாகராஜ் 21, கணேசன் 45 ஆகியோருடன் மணிகண்டன். 35 என்பவரது ஆட்டோவில் பங்களாமேட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோ மதுரை ரோட்டில் இருந்து பழைய டி.வி.எஸ்., ரோட்டிற்கு செல்ல திரும்பியது.

அப்போது மதுரை நோக்கி சென்ற லாரி வேகமாக ஆட்டோவில் மோதியது. இச்சம்பவத்தில் கண்ணன், மணிகண்டன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற நான்கு பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future