போடி அருகே டூ வீலர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

போடி அருகே டூ வீலர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்.

போடி அருகே டூ வீலரில் தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன், 55. கம்பத்தை சேர்ந்தவர் பாலு, 50. மாடு வாங்கி விற்கும் வியாபாரிகளான இவர்கள் இருவரும் டூ வீலரில் போடிக்கு சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ராசிங்காபுரம் அருகே வந்த போது, எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போடி போலீசார் பூமலைக்குண்டை சேர்ந்த பஸ் டிரைவர் கண்ணனை, 34 கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!