வருஷநாடு அருகே கஞ்சா கடத்திய இருவர் கைது: 75 கிலோ பறிமுதல்

வருஷநாடு அருகே கஞ்சா கடத்திய இருவர் கைது: 75 கிலோ பறிமுதல்
X

கஞ்சா கடத்தி கைதானவர்களுடன் வருஷநாடு போலீசார்.

வருஷநாடு அருகே கஞ்சா கடத்தியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்; 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் பண்டாரஊத்து பளியன்பாறை அருகில் வருஷநாடு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

இது தொடர்பாக பண்டாரஊத்து கிராமத்தை சேர்ந்த ஜோதிபாசு, சேடபட்டியை சேர்ந்த உதயவன் ஆகியோரை கைது செய்தனர். உசிலம்பட்டியை சேர்ந்த விஜி, காளப்பன்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இவர்கள் ஆந்திராவில் இருந்து இந்த கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!