தேனியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

தேனியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
X
தேனி மாவட்டத்தில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு பேரை பெரியகுளம் போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் வரதராஜ் நகரை சேர்ந்தவர் செல்வி,. இவரிடம் குடிநீர் குடிக்க கேட்பது போல் நடித்த இருவர் இவர் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்துச் சென்றனர். உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்த சந்திரா என்பவரிடமும் நான்கு பவுன் செயினை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பெரியகுளம் போலீசார் மதுரையை சேர்ந்த பாண்டியன், தாம்பரத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பறிமுதல் செய்த செயின் மீட்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!