கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக  கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த இருவர் கைது
X
கோயிலுக்கு செல்வதாக கூறி பெண்களிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த 2 பேரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த சந்திரசேகர் மனைவி பாரிஜாதம் (வயது 57.) ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், ஆன்மீக சுற்றுலா தளத்திற்கு செல்ல முடிவு செய்தார். கேத்தார்நாத், பத்ரிநாத் செல்ல இணையத்தில் வந்த நம்பரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் ரயில் மூலம் அழைத்துச் செல்ல ஒரு பெட்டிக்கு 72 பேர் தேவை எனக்கூறி உள்ளனர். பாரிஜாதம் 90 நபர்களிடம் 4 லட்சத்து 800 ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளார். திரும்ப அவர்களிடம் இருந்து எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. இது குறித்து பாரிஜாதம் தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். தேனி சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பாரிஜாதத்திடம் பணத்தை ஏமாற்றியவர்கள் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஹேமாமாலினி( 47,) மும்பை சான்பாஜி நகரை சேர்ந்த வெங்கட்ரமணன்,( 60 ) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!