பொருட்களின் வைப்பறையாக மாறிய தாய்மார்கள் பாலுாட்டும் அறை

பொருட்களின் வைப்பறையாக மாறிய  தாய்மார்கள் பாலுாட்டும் அறை
X

பெரியகுளம் பஸ்ஸ்டாண்டில் செயல்படாமல் உள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறை.

பெரியகுளம் பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை பொருட்களின் வைப்பறையாக மாறி உள்ளதால் சமூக ஆர்வலர்கள் வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக புறக் காவல் நிலையம் அமைப்பது ,சுற்றுச்சுவர் அமைப்பது மற்றும் தரம் உயர்த்தி மறு சீரமைப்பு பணிகள் சுமார் 1 கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திற்கு தினம்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது .

புதிய பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பணிகள் தொடங்கிய நாள் முதலே தாய்மார்கள் பாலூட்டும் அறையை தனியார் ஒப்பந்ததாரர் அவரது அலுவலகம் மற்றும் பொருட்கள் வைப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் இருக்கும் நிலையில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை தனியார் ஒப்பந்ததாரர் பயன்படுத்தி வருவதால் ஏராளமான தாய்மார்கள் மிகவும் அவதிக்குள்ளாவதாகவும் மேலும் பெண்கள் முகம் சுளிக்கும் வண்ணம் உள்ளது.

இந்த தனியார் ஒப்பந்ததாரருக்கு, பல்வேறு வகையான முறைகேடுகளுக்கும் துணையாக ஒரு சில நகர்மன்ற உறுப்பினர்களும் பின்புலமாக இருந்து செயல்படுவதாக தகவல்கள் வருகின்றன மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா பெண்களுக்காக பிரத்யேகமாக ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை என்று ஒன்றை உருவாக்கி கொடுத்தார். ஆனால் இன்றைய நிலை அதற்கு மாறாக உள்ளது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெண் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர் .

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil