கல்லீரல் கோளாறை சரி செய்யும் துளசி தீர்த்தம் !

பைல் படம்
பெருமாள் கோயிலில் தரப்படும் துளசி தீர்த்தம் நிறைய நோய்களை தீர்க்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகளுக்கும் இந்த துளசி தீர்த்தம் நல்லதொரு மருந்தாக அமைகிறது.
மனிதனின் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு தேவையான ஐநூறுக்கும் மேலான செயல்களை செய்யும் ஒரே உறுப்பு கல்லீரல் மட்டுமே. அதேவேளையில், கெட்டுப் போனாலோ அல்லது சிதைந்தாலோ மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டும் தான்.
அதிக புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள், இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு போன்றவை வர அதிக வாய்ப்பு உள்ளது.
துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி, அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் சரியாகி விடும்போது வேறு சில மூலிகைகள் கலந்த துளசி தீர்த்தம் எத்தனை வல்லமை வாய்ந்தது?
துளசி தீர்த்தம் செய்வது எப்படி? துளசி தீர்த்தம் செய்ய, 3 ஏலக்காய், பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை, துளசி இலைகள் 2 அல்லது 3 தேவைப்படும்.முதலில் ஏலக்காயை தட்டிக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ போன்றவற்றை கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்தால் துளசி தீர்த்தம் தயார்.இதனை அடிக்கடி குடித்து வந்தால், கல்லீரல், மண்ணீரல் தொடர்பான அத்தனை பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu