தேனி லோக்சபா தொகுதியில் 20ம் தேதி டி.டி.வி., மனுதாக்கல்..!?

தேனி லோக்சபா தொகுதியில் 20ம் தேதி டி.டி.வி., மனுதாக்கல்..!?
X

டிடிவி தினகரன் (கோப்பு படம்)

தேனி லோக்சபா தொகுதியில் பா.ஜ.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர் டி.டி.வி., தினகரன் மார்ச் 20ம் தேதி மனுதாக்கல் செய்கிறார்.

தேனி லோக்சபா தொகுதியில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் டி.டி.வி., தினகரன் தனது குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அ.ம.மு.க.,வினர் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். டி.டி.வி., தங்குவதற்கு தேனி, கம்பம் பகுதிகளில் பங்களாக்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

தவிர 10 பூத் கமிட்டிகளுக்கு ஒரு வீடு என்ற வீதத்தில் ஒரு மாதம் வாடகைக்கு எடுக்கவும் டி.டி.வி., உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து டி.டி.வி.,க்கு தேர்தல் பணிகளை செய்ய பல நுாறு பேர் தேனி தொகுதிக்குள் வந்து விட்டனர். இப்படி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், வரும் 20ம் தேதி டி.டி.வி., தினகரன் தேனி தொகுதிக்கு வருகிறார். வத்தலக்குண்டு அருகே கெங்குவார்பட்டி கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், அவர் தொகுதிக்குள் ஊர்வலமாக வருகிறார். அன்றே அவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்வார் என்று அ.ம.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.

தினகரன் தேனி தொகுதிக்கு அவர் பதவியில் இருந்த 15 ஆண்டு காலத்தில் (ஒரு முறை லோக்சபா எம்.பி., இருமுறை ராஜ்யசபா எம்.பி.,) தொகுதிக்கு செய்த நற்பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்து பட்டியல்களை தயாரிக்குமாறு அ.ம.மு.க.,வினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!