தேனி எஸ்.பி.யை ஓவியமாக வரைந்த மூத்த ஓவியருக்கு பாராட்டு

தேனி எஸ்.பி.யை  ஓவியமாக வரைந்த மூத்த ஓவியருக்கு பாராட்டு
X

தேனி எஸ்.பி.,யை வரைந்த ஓவியர் நடராஜன்(71 )(கருப்பு கண்ணாடி அணிந்திருப்பவர்)  படத்தை எஸ்.பி.-யிடம்  பரிசாக அளித்தார்.

தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவை 71 வயது ஓவியர் வரைந்து அந்த படத்தை எஸ்.பி.க்கு பரிசளித்தார்

தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவை போடியை சேர்ந்த ஓவியர் நடராஜன்( 71.) வரைந்தார். இவர் 55 ஆண்டுகளாக ஓவியம் வரைந்து வருகிறார். பெயிண்டிங், ஓவியக்கலையில் பல விருதுகளை பெற்றுள்ளார்.

எஸ்.பி., தலைமையில் தேனி மாவட்ட காவல்துறை மிகுந்த கண்ணியத்துடனும், நேர்மையுடன் செயல்படுவதாகவும், அதனை பாராட்ட எஸ்.பி.,யின் ஓவியத்தை வரைந்ததாகவும் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த ஓவியத்தை இன்று எஸ்.பி.,க்கு பரிசளித்தார். மருத்துவ உயிரி பொறியாளர் ராஜேஷ் கண்ணன், விருட்சம் அறக்கட்டளை தலைவர் நாணயம் சிதம்பரம் உடன் இருந்தனர். ஓவியரை பாராட்டும் விதமாக அவருக்கு எஸ்.பி., பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture